நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை

ஷா ஆலாம்:

மலேசியாவில் சீனப் புத்தாண்டு, ரமலான் பண்டிகைக் காலத்தில், காசநோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சமூக நிகழ்வுகள், காற்றோட்டம் குறைந்த இடங்களில் மக்கள் கூடுவதால், காற்றின் மூலம் பரவும் இந்த நோய் வேகமாகப் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலன் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அஸ்ருல் முகமது கலிப் கூறுகையில், காசநோயாளிகள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து, பணியிடங்கள், தங்குமிடங்கள், வழிபாட்டுத் தலங்களில் அதிகமாகப் பரவும் அபாயம் உள்ளது என்றார். 

ஒரே ஒருவர் அறியாமலேயே பலருக்கு தொற்றை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

எனவே, நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதியவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் காசநோய் ஆபத்தை மிகக் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

நீண்டகால இருமல், இரத்தம் கலந்து இருமல், குறுகிய காலத்தில் அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset