நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு

பாசிர் மாஸ்:

கடந்த மாதம் காம்போங் துஜு, தும்பாட் பகுதியில் மூன்று சீன குடிமக்களையும் ஒரு மியான்மர் குடிமகனையும் சட்டவிரோதமாக கடத்தியதாக, இரண்டு மெக்கானிக்குகள் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொஹமத் ஃபைருல் முமின் அப்துர் ரஹீம் (45), முஹம்மத் அஸ்மான் இஸ்மாயில் (40) ஆவர்.

குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோதும், இருவரிடமிருந்தும் எந்தவித ஒப்புக்கொள்ளலும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மாலை 5.05 மணியளவில், மேற்கண்ட இடத்தில் அவர்கள் மனிதக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் மீது மனிதக் கடத்தல், சட்டவிரோத குடியேற்ற தடுப்பு சட்டம் 2007, பிரிவு 26A-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். 

நீதிமன்றம் வழக்கை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கின் மறு குறிப்பிடு தேதி ஏப்ரல் 9 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset