நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்

பொன்தியான்:

மலேசியா நல்லாட்சி, தூய்மையான நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயல்பட்டால், மிக வேகமான முன்னேற்றத்தை அடையும் அசாதாரண திறன் கொண்ட நாடாக அமையும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார சாதனைகள், நிர்வாக நிலைத்தன்மை, முதலீட்டாளர்கள் காட்டும் நம்பிக்கையால் உருவானவை என அவர் கூறினார். 

நிதியமைச்சராகவும் செயல்படும் அன்வார், கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அரசின் ஆரம்ப கணிப்புகளை விட அதிகமாக இருந்தது என தெரிவித்தார்.

“5.4 முதல் 5.5 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்த்தோம்; ஆனால் 6.4 சதவீத வளர்ச்சி பதிவானது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது,” என்றார் அவர்.

பொன்தியானின் புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா விழாவில் உரையாற்றிய அவர், இந்த வெற்றி அரசியல் விளம்பரம் அல்ல; மாறாக, நாட்டின் பொருளாதார அடித்தள வலிமையையும், அரசின் கொள்கைகளின் செயல்திறனையும் பிரதிபலிப்பதாக கூறினார். 

மேலும் குற்றச்செயல்கள், கடத்தல், போதைப்பொருள் ஒழிப்புக்கு உறுதியான தலைமையும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் அவசியம் என வலியுறுத்திய அன்வார், நோன்பு மாதத்தில் தானங்களையும் நற்பணிகளையும் அதிகரித்து, சமூக ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் எனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset