செய்திகள் மலேசியா
2030க்குள் கிளாந்தானில் குடிநீர் சிரமைப்பு: சைசோல் இஸ்மாயிலின் வாக்குறுதி
கோத்தா பாரு:
கிளாந்தான் மாநிலத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் தூய்மையான குடிநீர் விநியோகப் பிரச்சினை, 2030-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மொத்தம் 34 திட்டங்கள் தற்போது திட்டமிடல் நிலைகளில் உள்ளன.
நீர் உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாட்டு பொதுப்பணிக் குழுவின் துணைத் தலைவர் சைசோல் இஸ்மாயில் தெரிவித்ததாவது, பல மாவட்டங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் இதில் அடங்கும். இதுவரை 13 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன, 9 திட்டங்கள் கட்டுமானத்தில், 16 திட்டங்கள் வடிவமைப்பு நிலையில், மேலும் 9 திட்டங்கள் திட்டமிடல் கட்டத்தில் உள்ளன.
பெரும்பாலான திட்டங்கள் 2028-ஆம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இரண்டு திட்டங்கள் மட்டும் 2030-இல் நிறைவு பெறும் என அவர் கூறினார்.
கிளாந்தானில் பாசிர் மாஸ், தும்பட், மாச்சாங், பாச்சோக், கோத்தா பாரு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதை சமாளிக்க, 16 நீர் விநியோக லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், நீர் வீணாகும் அளவைக் குறைக்க, மாநிலம் முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் பழைய குழாய்கள் மாற்றும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 2:13 am
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 16, 2026, 4:44 pm
ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு
February 16, 2026, 4:40 pm
ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்
February 16, 2026, 1:56 pm
மக்களின் உணர்வுகளை டத்தோஸ்ரீ அன்வார் குறைத்து மதிப்பிடக் கூடாது: ரபிசி
February 16, 2026, 1:11 pm
பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்
February 16, 2026, 12:58 pm
பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை
February 16, 2026, 12:36 pm
மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்
February 16, 2026, 11:54 am
