நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைபிபிபி தலைவராக மேக்லின் நியமனத்தை  ரத்து செய்வதில் கேவியஸ் தோல்வி

கோலாலம்பூர்:

மைபிபிபி கட்சியின் தலைவராக மேக்லின் நியமனம் செய்ததை ரத்து செய்யும் முயற்சியில் டான்ஸ்ரீ கேவியஸ் தோல்வி கண்டுள்ளார்.

அண்மையில் காலமான டத்தோஸ்ரீ மெக்லின் டி குரூஸ் மைபிபிபி கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரி டான்ஸ்ரீ எம். கேவியஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மறுஆய்வு செய்வதற்கான அனுமதி குறித்து நீதிபதி டத்தோ அமர்ஜீத் சிங் முன்னிலையில் விசாரணைகள் நடந்தது.

சட்டத்துறை தலைவர் அலுவலகம் சார்பில் அரசு வழக்கறிஞர் முஹம்மது ஹைருலிக்ராம் ஹைருதின் ஆஜரானார்.

இதில் டான்ஸ்ரீ கேவியஸின் விண்ணப்பத்தை நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

இதனை கேவியஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சைரின் டாங் உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset