நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது

அகமதாபாத்: 

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் இணைந்து அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். 

ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து அந்த அணி தடுமாறிய நிலையில் இருவரும் இந்த கூட்டணி அமைத்தனர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர், மார்ஷ், ஸ்மித் ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் பதற்றம் அடையாமல் ஆடிய ஹெட் 137 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகளும்  5 சிக்சர்களும் அடித்து நொறுக்கினார். இறுதியில் அவரை சிராஜ் அவுட்டாக்கினார். லபுஷேனும் 58 ரன்கள் அடித்தார்.

India vs Australia Live Updates | IND vs AUS World Cup 2023 Final Live  Score Today: Travis Head, Marnus Labuschagne drive Australia forward vs  India

India vs Australia Live Score, World Cup 2023 Final: Head hundred seals  Australia's record-extending 6th WC title | Hindustan Times

இந்திய அணி சார்பில் குல்தீப், ஜடேஜா, சிராஜ், ஷமி, பும்ரா ஆகியோர் பந்து வீசியும் அவர்களது விக்கெட்டை அணிக்கு தேவையான நேரத்தில் கைப்பற்ற முடியவில்லை. 

43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து  ஆஸ்திரேலியா உலக கோப்பையை தட்டி சென்றது. 

அதிலும் பும்ராவின் பந்தில் ஸ்மித் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். அவர் ரெவியூ கேட்காமல் வெளியேறினார். அதன் பிறகு அவர் அவுட் ஆகவில்லை என்று தெரிந்தது. 

பும்ரா 2, முஹம்மத் ஷமி, முஹம்மத் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இந்திய ஆட்டக்காரர்களும் ரசிகர்களும் சோகமாக மைதானத்தில் அமர்ந்திருந்தார்கள். இன்றைய ஆட்டத்தை காண பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத் ஷா, பாலிவுட் நட்சத்திரங்கள் என்று பல முக்கிய பிரமுகர்கள் திரண்டிருந்தார்கள்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset