
செய்திகள் விளையாட்டு
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயம்
அகமதாபாத்:
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. 241 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற முடியும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 54 ரன்கள் எடுத்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அதனால் கிரிக்கெட் மைதானமே மொத்தமாக அமைதியானது. கம்மின்ஸ் அவரது விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய சொல்லி பணித்தது. கில், 4 ரன்களில் வெளியேறினார். ரோகித் ஷர்மா, 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 81 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.
இக்கட்டான அந்த தருணத்தில் இருந்து அணியை மீட்கும் கூட்டணியை அமைத்தனர் கோலி மற்றும் கே.எல்.ராகுல். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தனர். அதே நேரத்தல் அரை சதம் கடந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்தார் கோலி.
இந்தச் சூழலில் 29-வது ஓவரை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்று இன்சைட் எட்ஜ் முறையில் போல்ட் ஆனார் கோலி. அப்போது தான் விக்கெட் இழந்த முறையை பார்த்து கோலி அப்படியே சில நொடிகள் திகைத்து நின்றார். 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் அவர்.
இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 761 ரன்களை அவர் எடுத்துள்ளார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக தங்கள் ஆட்டத்தின் மூலம் மைதானத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக உள்ள 1.30 லட்சம் பார்வையாளர்களை அமைதி கொள்ள செய்வோம் என கம்மின்ஸ் சொல்லி இருந்தார். கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அதனை அவர் செய்தும் காட்டியுள்ளார்.
கே எல் ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி 66 ரன்களை குவித்தார். அதன் பிறகு வந்த இந்திய துடுப்பாட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் கைகளில்தான் இந்தியா அணியின் வெற்றி இருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் முடிவு தெரியும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 12:36 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
December 1, 2023, 3:32 pm
உலக காற்பந்து தர வரிசையில் ஹரிமாவ் மலாயா அணி 130ஆவது இடத்திற்கு முன்னேற்றம்
December 1, 2023, 10:33 am
ஐரோப்பா லீக் கிண்ணம் லிவர்பூல் அபாரம்
November 30, 2023, 4:51 pm
ஜே.டி.தி அணி ஸ்பெயின், போர்த்துகல் நாடுகளில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது
November 30, 2023, 11:04 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணம் மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
November 29, 2023, 5:46 pm
2028ஆம் ஆண்டுக்கான சுக்மா போட்டியில் ஷாரியா சட்டத்தை உட்படுத்திய ஆடை முறை: ஹன்னா இயோ விளக்கம்
November 29, 2023, 5:12 pm
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பார்
November 29, 2023, 10:33 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி படுதோல்வி
November 29, 2023, 10:33 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 28, 2023, 11:02 am