
செய்திகள் இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டத்திற்கு இடையில் பாலஸ்தீன கொடியுடன் புகுந்த ரசிகர்
அகமதாபாத்:
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் ஆடுகளத்துக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
அந்த நபர் அணிந்திருந்த மேலாடையில் ‘Free Palestine’ என்றும் ‘Stop - Bombing Palestine’ என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. அதோடு தனது பாலஸ்தீன கொடியை தனது முகக் கவசமாகவும் அவர் அணிந்திருந்தார்.
ஸாம்பா வீசிய 14-வது ஓவரின் போது அந்த நபர் களத்துக்குள் நுழைந்தார். அப்போது கோலி மற்றும் ராகுல் பேட் செய்தனர். அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைது செய்து வெளியேற்றினர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 4:04 pm
அழிவுப் பாதையில் ரயில்வே: மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
December 3, 2023, 12:42 pm
மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முந்துகிறது
December 3, 2023, 12:29 pm
தேர்தல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை - சந்திரசேகர ராவ் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவு
December 3, 2023, 7:55 am
4 மாநில தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது
December 2, 2023, 3:48 pm
தேசிய கீதம் அவமதிப்பு: 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு
December 2, 2023, 3:08 pm
இந்தியாவில் சிம் கார்டு வாங்க புதிய விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
December 2, 2023, 2:21 pm
பள்ளிவாசல் பாங்கு ஓசையைவிட கோயில் பஜனைகளில் அதிக சத்தம்: குஜராத் உயர்நீதிமன்றம்
December 2, 2023, 12:34 pm
5 மாநில தேர்தல்களில் ரூ.1,766 கோடிக்கு பணம் பொருள்கள் பறிமுதல்
December 1, 2023, 6:02 pm