நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் சேவையில் தெலுங்கு அறக்கட்டளையின் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்

கோலாலம்பூர்:

வசதியற்ற குழந்தைகள், மாணவர்களுக்காக தீபாவளிக் கொண்டாட்டத்தில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் நேர்மறையான தாக்கத்தையும் பங்களிப்புகளைப் பற்றியும் கேட்பது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.

கோலாலம்பூர் டாமான்சாரா காமன்வெல்த் கிளப்பில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  செலாயாங் சுவீட் கேர் இல்லத்தை சேர்ந்த 16 குழந்தைகளுக்கு  தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு  ஆதரவு வழங்கும் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

இந்த நிகழ்வை வெற்றிகரமாகத் திட்டமிட்டதற்காக மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் தலைவர் டத்தோ ஆர். காந்த ராவ் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழாவை இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடுவது நிகழ்வுக்கு முக்கியத்துவம் சேர்க்கிறது.

மேலும் சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பைக் காண்பது அற்புதமாக இருக்கிறது.

ஒரு பள்ளி மாணவிக்கும்  நிதி ஊக்குவிப்பு வழங்கப்பட்டதை பெரிதும் வரவேற்கிறேன்.

மலேசிய தெலுங்கு அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளாக பின்தங்கிய மக்களுக்கு  நீண்டகாலமாக அர்ப்பணிப்பு உணர்வுடன் 
உதவி வருகிறது என்பது உண்மையிலேயே வரவேற்கக்கூடியது.

கோவிட்-19 தொற்றுநோயால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இனம் பாராமல் அறக்கட்டளை மூலம் பேருதவிகளை  புரிந்துள்ளது.

இந்த வேளையில் தலைவர் டத்தோ ஆர் காந்தா ராவ் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவிற்குப் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசிய தெலுங்கு அறக்கட்டளை தொடர்ந்து சமூகத்திற்கான  சேவையில் தொடர்ந்து ஈடுபட நான் மேலும் ஊக்குவிக்கிறேன். 

இது போன்ற முயற்சிகள் மூலம் உண்மையிலேயே  ஆதரவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கும்.

மக்களுக்கு சேவை செய்வதில் அறக்கட்டளையின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, 

மேலும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதில் உங்களுடன் இணைகிறேன் என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset