நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கடும் அதிருப்தியில் சிங்கப்பூர் பேருந்து பயணிகள்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் சில பேருந்துச் சேவைகளை ரத்துச் செய்யவும் மாற்றியமைக்கவும் நிலப் போக்குவரத்து ஆணையம் செய்திருக்கும் முடிவைப் பயணிகள் கடுமையாக குறை கூறியிருக்கின்றனர்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்சேவை தொடங்கிய பிறகு 167 பேருந்துச் சேவையை ரத்துச் செய்யப் போவதாகப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

162 , 162M ஆகிய இரண்டு எண்கள் ஒரே சேவையாகச் செயல்படும்.

சேவை எண் 75 இனிமேல் ஊட்ரம் பார்க் ரயில் நிலையம் (Outram Park MRT), ஷென்டன் வேய் (Shenton Way), மரீனா சென்டர் (Marina Centre) ஆகிய இடங்களுக்குப் போகாது.

சேவை எண் 167 செம்பவாங், அப்பர் தாம்சன், நொவீனா, ஆர்ச்சர்ட், மத்திய வர்த்தக வட்டாரம், புக்கிட் மேரா என்று ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

அது அடுத்த மாதம் 10ஆம் தேதியோடு நிறுத்தப்படும்.

சேவை எண் 167, 162, 75 ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்துவது 30 முதல் 40 விழுக்காடு குறைந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறுவதைப் பயணிகள் சிலர் மறுத்தனர்; ஆணையத்தின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தனர். 

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset