செய்திகள் மலேசியா
'பெர்மிம் 50' ஒரு பறவைப் பார்வை
கோலாலம்பூர்:
1957 மலேசியா சுதந்திரம் அடைந்தது. பல்வேறு இனத்தவர்களும் மலேசியாவின் சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள். அதில் இந்திய முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. செப்டம்பர் 16, 1963 மலேசிய கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
நிறுவப்பட்ட ஆறாண்டுகளில் யாரும் எதிர்பாராத துயர சம்பவமாய் மே கலவரம் அமைந்தது. அந்த கருப்பு தினத்திற்கு பிறகு பல்வேறு இனங்களுக்கிடையே பல்வேறு மனமாற்றங்களும் சிந்தனைகளும் தலைதூக்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது. இங்குள்ள இந்தியா முஸ்லிம்களின் நிலைமை என்ன என்ற கேள்வியும் விவாதங்களும் எல்லா முஸ்லிம் இயக்கங்களிலும் தோன்றிய காலம் அது.
அந்த கால கட்டத்தில் தான், தைப்பிங்கில் உள்ள ஒரு எளிய ரொட்டி விற்பனையாளரான மர்ஹும் ஏ.இ. முகமது இப்ராஹிம், மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம் சமூகத்திற்காக ஒரு தாய் அமைப்பை உருவாக்கும் யோசனையை முன்மொழிந்தார்.
இதற்கிடையில் நாடு முழுதும், சிறு சிறு ஜமாத்துக்கள் பல்வேறு பெயர்களில் சிறியதும் பெரியதுமாக பல இயக்கங்கள் உருவெடுத்துவிட்டன. இந்த இயக்கங்களுக்கெல்லாம் ஒரு பாலம் தேவைப்பட்டது. உதிரிகளாகக் கிடக்கும் இந்த முஸ்லிம் அமைப்புகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தால் தான் ஒரு சக்தியை உருவாக்க முடியும் என சிந்தித்தார்கள் படித்த பட்டதாரிகளையும் வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்ட குழுவினர்.
தைப்பிங்கில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உருவான பிறகு, கருத்து வேகம் பெற்றது. இந்த இயக்கங்களுக்கெல்லாம் ஒரு தாயகம் வேண்டும். அதனை வழி நடத்த ஒரு தந்தை வேண்டும் என எண்ணிய இளைஞர்கள் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லாஹ் தலைவராகத் தேர்வு செய்தார்கள்.
1969ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள் தைப்பிங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் ஒரு (PMPAT ஏற்பாட்டில்) மர்ஹும் ஹாஜி இஷாக் தலைமையில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தான் நமது சமுதாயத்துக்காக ஒரு பாலம் அல்லது பேரவை தேவை என்ற முடிவெடுக்கப்பட்டு தலைநகரில் இருப்பதால் அதனைப் பதிவு செய்வது போன்ற அனைத்துப் பொறுப்புகளையும் சிலாங்கூர் இந்திய முஸ்லிம் சங்கமான SIMAவிடம் ஒப்படைக்கப்பட்டது.
1971 இல் சிலாங்கூர் இந்திய முஸ்லிம் சங்கம் அமைப்புக் குழுவொன்றை முறையாகத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டத்தைக் கூட்டியது. அதில் டான்ஸ்ரீ உபைதுல்லா ஏகமனதாக தலைவராகத் தேர்வு செய்த கூட்டம் டத்தோஸ்ரீ இக்பாலை செயலாளராக நியமித்தது.
1973 இல் பெர்மிம் அமைப்புப் பதிவு முடிந்து, முதல் கூட்டம் மார்ச் மாதம் கோலாலம்பூர் ஜாலான் ராஜா, பழைய நகர மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. டான்ஸ்ரீ தலைவராகவும் ஹாஜி இஷாக் துணைத் தலைவராகவும் டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் கௌரவச் செயலாளராகவும் அல்மர்ஹும் கே. முஹம்மது ஹனீஃப் துணைச் செயலாளராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். இந்த அமைப்பு ஆரம்பத்தில் 11 இணைப்பு சங்கங்களைக் கொண்டிருந்தது.
1973ல் பெர்மிம் பேரவையை முன்னின்றுத் தொடக்கிய டான்ஸ்ரீ உபைதுல்லா அவர்களால் அரசியல், வணிகம் போன்ற இன்ன பிற ஈடுபாடுகள் காரணமாக தொடர்ந்து தலைமை தாங்க விரும்பவில்லை. அதனால் இளம் ரத்தங்களின் ஆசைக்கு வழிவிட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு ஒதுங்கினார்.
1976 முதல் 1988 வரை பெர்மிம் தலைவராக டத்தோ ஹாஜி முகமது இஸ்மாயில் ஷெரீஃப் பதவி வகித்த காலத்தில், மூன்று முக்கிய நோக்கங்களான பெர்மிம்மை ஒரு தேசிய அமைப்பாக வலுப்படுத்துதல், பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பெர்மிம்க்கு நிரந்தர தலைமையகத்தைப் பெறுதல் அடைய பல குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பெர்மிமை வலுப்படுத்தவும், பொருளாதார திட்டங்களை செயல்படுத்தவும், நிரந்தர தலைமையகத்தை பாதுகாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள், பல்வேறு சவால்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொண்டாலும், இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கான உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
ஹாஜி முகமது இஸ்மாயில் ஷெரீஃப் பதவி காலத்திற்க்கு பின்பு வந்த முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் எஸ்.எம்.ஐ ஷேக் அலாவுதீன் அவர்கள் காலத்தில் பெர்மிம் தலைமையகத்திற்காக ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள மலாயன் மேன்ஷனில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பெர்மிமின் தலைமையமாக செயல்படுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
அவர் காலத்தில் பெர்மிமுக்கு என்று நம் குரல் என்ற மாத பத்திரிகை வெளியிடப்பட்டது. இறையருட் கவிஞர் சீனி நைனா முஹம்மது அவர்களை ஆசிரியராக கொண்டு அந்த பத்திரிகை 9 ஆண்டுகள் வெளிவந்தது.
அடுத்ததாக தலைவராக வந்த டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் பெர்மிமின் மேலாண்மையை கார்ப்பரேட் பாணியில் அறிமுகப்படுத்தினார். மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம், உருவாக்கிட உதவி செய்தார். பல்வேறு அமைப்புகளையும் சங்கங்களையும் உருவாக்கியதோடு அவற்றை பேரவையில் இணைக்க வைத்தார். மலேசிய இந்திய முஸ்லிம் காகித விற்பனையாளர்கள் சங்கம், மலேசிய நாணய மாற்று வணிகர்கள் சங்கம் போன்ற அமைப்புகளை பெர்மிமில் இணைத்தார்.
டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் தலைமைத்துவத்தில் இன்றைய பிரதமர் அன்வார் இப்ராஹிம் (அன்றைய கல்வி அமைச்சர்), சிலங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஹாரூன் போன்ற ஆளுமைகளை பெர்மிம் கூட்டங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும்அழைத்து வரப்பட்டனர்.
இதற்கு பின்பு தலைவராக வந்த டத்தோ ஷாஹுல் ஹமீது பெர்மிமின் நோக்கத்தையும், அதற்க்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அதிகமான கிளைகள் உருவாக்குவது மூலம் பெர்மிமின் விரிவாக்கத்தை ஊக்குவித்தார். கல்வி, இளைஞர்கள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகம் கவனம் செலுத்தினார். சமூகத் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் பங்கேற்புடன் வாவாசான் 2020 பொருளாதார கருத்தரங்கை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். பெர்மிமின் கல்வி நிதியை உருவாக்குவதில் முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார்.
ஆறாவது தலைவராக வந்த அன்வர் ஹுசைன் 1987ல் தொடங்கி 27 ஆண்டுகள் பல நிலைகளில் இருந்து பெர்மிம் பேரவையில் செயலாற்ற கூடிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். பெர்மிம் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து 2001ல் விலகியபின் அவரை பெர்மிம் கட்டிடத்தின் மூன்று டிரஸ்டிகளின் ஒருவராக நியமிக்கப்பெற்று அவர் சேவை தொடர்ந்தவண்ணமாக இருப்பதை நினைத்து பெருமிதம் அடைகிறார்.
பெர்மிம் பேரவையின் ஏழாவது தலைவராக வந்த டத்தோ ஜமரூல் கான் 1989 இல் AKM எனப்படும் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தலைமைத்துவத்தில் பல்வேறு கருத்தரங்குகள், தொழிலியல் கூட்டங்கள், நடைபெற்றன. வர்த்தகர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு பயன்பெறத்தக்க அவர் பல நகர்வுகளை முன்னெடுத்து சென்றார். அவரது தலைமைத்துவத்தில் நாடு முழுவதும் பல விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அவர் பெர்மிமில் பொறுப்பில் இணையும்போது அதிகமான இளைஞர்கள், அந்த காலகட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் ஓர் குரலாய் பெர்மிம் செயல்பட்டது. அவருடைய தலைமைத்துவத்தில் மற்ற இனத்தவர்களின் சங்கங்களுடன் இணைந்து அதிகமான நிகழ்வுகளிலும் , பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெர்மிமை அனைவரும் தெரிந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தி இருந்தார்.
எட்டாவது தலைவராக வந்த டத்தோ டாக்டர் செய்யது இபுறாஹிம் தலைவராக இருந்த காலகட்டத்தில் பெர்மிம் பேரவைக்குத் தலைநகரில் ஒரு கட்டிடம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை அல்லாஹ்வின் அருளால் நிறைவேற்றி வைத்துள்ளார்.
விஸ்மா பெர்மிம் என்ற பெர்மிம் தலைமையகம் நமது உபயோகத்திற்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்வதோடு வாடகையின் வழி நிரந்தரமான ஒரு வருமானத்தையும் நமக்கு அளித்து வருகின்றது. மேலும் டாக்டர் செய்யது இபுறாஹிம் தலைவராக இருந்த கால கட்டத்தில் (2004 - 2014) பெர்மிமின் இளைஞர் அணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
ஒன்பதாவது தலைவராக வந்த ஹாஜி தாஜுதீன் இயக்கங்களின் ஆதரவுடன், சமுதாய தலைவர்களின் ஒத்துழைப்புடன், பெர்மிம் வளர்ச்சிக்கும், சமுதாய குரலாக பெர்மிம் உருமாற்றத்திற்கும் இயங்கி வெற்றி பெற்ற வைத்துள்ளார்.
தற்போதைய தலைவர் ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் பெர்மிமின் 1993 ஆம் ஆண்டின் எஸ்.பி.எம் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்ற காலத்தில் தலைவராக இருந்த டத்தோ ஷாஹுல் ஹமீது அவர்களின் உரையால் உந்தப்பட்டு சமுதாய சேவையில் ஈடுபட வேண்டுமென ஆவல் கொண்டேன் என்றார். 1997 இல் இருந்து இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தன்முனைப்பு முகாமின் அமைப்பாளாராக சேவையாற்றி இருக்கிறார்.
2008 ஆம் ஆண்டில் பெர்மிம் இளைஞர் அமைப்பின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். பின்பு 2009 ஆம் ஆண்டின் பேராளர் மாநாட்டில் உதவித் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டத்திலிருந்து அவருடைய சேவை பெர்மிமில் தொடர்கிறது. கடந்த ஈராண்டாக தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் இணைப்பு சங்கங்களின் ஆதரவோடு எண்ணற்ற பல சேவைகளை செயல்படுத்தி சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
பெர்மிம் என்ற இந்த அமைப்பில் இளைஞர்கள் அதிகம் பங்கு பெற்று அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும். புதிய சிந்தனைகள் விதைக்கப்பட வேண்டுமெனில் இளைய சமுதாயம் தலைமை பொறுப்பை ஏற்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த கருத்தியலை நாம் கடந்த காலத்தில் பெர்மிம் அமைப்பிலேயே காணலாம்.
பெர்மிம் என்ற இந்த அமைப்பில் இளைஞர்கள் அதிகம் பங்கு பெற்று அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும். புதிய சிந்தனைகள் விதைக்கப்பட வேண்டுமெனில் இளைய சமுதாயம் தலைமை பொறுப்பை ஏற்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த கருத்தியலை நாம் கடந்த காலத்தில் பெர்மிம் அமைப்பிலேயே காணலாம் என்றும் கூறினார்.
டிஜிட்டல் மயமாக்களால் உலகத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது. மனிதர்களின் எண்ணங்கள் மாறி கொண்டு வருகிறது. வியாபார யுக்திகள் புதிதாய் தோன்றி இருக்கிறது. நாமும் மற்றவர்களுடன் போட்டியிட நம்முடைய கற்றலில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். நமது பிள்ளைகளை புதிய உலகத்தை எதிர் கொள்ள தயார் செய்ய வேண்டும். சமுதாய சேவைகளில் இளைஞர்கள் பங்கு பெற மூத்த தலைவர்கள் வழி விட்டு வழி காட்ட வேண்டும். டிஜிட்டல் மயமாக்களால் உலகத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது.
மனிதர்களின் எண்ணங்கள் மாறி கொண்டு வருகிறது. வியாபார யுக்திகள் புதிதாய் தோன்றி இருக்கிறது. நாமும் மற்றவர்களுடன் போட்டியிட நம்முடைய கற்றலில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். நமது பிள்ளைகளை புதிய உலகத்தை எதிர் கொள்ள தயார் செய்ய வேண்டும். சமுதாய சேவைகளில் இளைஞர்கள் பங்கு பெற மூத்த தலைவர்கள் வழிவிட்டு வழிகாட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
1973 இல் பெர்மிம் துவங்கியபோது இணை இயக்கங்களின் எண்ணிக்கை 11. இன்று 2023 இல் இணை இயக்கங்களின் எண்ணிக்கை 63. பெர்மிம் தொடங்கியது முதல் அனைத்து தலைவர்களும் பெர்மிம் வளர்ச்சிக்கு, மேம்பாட்டிற்கு சமுதாய குரலாக மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களின் தியாகத்தாலும் சேவையாலும் பெர்மிம் 50 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
- ஸமான் & அஸ்மான் ஷா
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 8:27 pm
சிலாங்கூர் மாநில அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை மத்திய அரசுக்கு செலுத்தியது: அமிரூடின் ஷாரி
November 15, 2024, 7:05 pm
பிரதமர் மீது தவறான பார்வையை உருவாக்கும் நோக்கில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது: ஃபஹ்மி
November 15, 2024, 6:54 pm
தரைவழியாக சிங்கப்பூர் வந்து செல்லும் மலேசியர்களுக்காக ஒற்றைக் குடிநுழைவுச் செயலி: சைபுடின்
November 15, 2024, 5:04 pm
மலேசியா வாடிக்கையாளர்களுக்கான சந்தாவை நெட்ஃபிலிக்ஸ் உயர்த்தியுள்ளது
November 15, 2024, 5:03 pm
கனமழையால் தலைநகரின் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின
November 15, 2024, 5:02 pm
அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளர் கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியாவை நீக்கியது
November 15, 2024, 5:01 pm
போலிஸ் துறையின் நேர்மை இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளது: ஐஜிபி
November 15, 2024, 2:46 pm
தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு பள்ளிகளில் தொடங்கப்படும்: சார்லஸ் சந்தியாகோ
November 15, 2024, 12:32 pm