நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024 மூன்றாம் காலாண்டில் மலேசியாவின் பொருளாதாரம் 5.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது: பேங்க் நெகாரா ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபார்

கோலாலம்பூர்:

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மலேசியாவின் பொருளாதாரம்
5.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோஶ்ரீ  அப்துல் ரஷித் கஃபார் இதனை தெரிவித்தார்.

நாட்டில் வலுவான முதலீட்டிலும் ஏற்றுமதியிலும் முன்னேற்றமும் அடைந்துள்ளது.

இதனால் 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மலேசியாவில் பொருளாதாரம் 5.3 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.2 விழுக்காடாக பதிவானது.

தற்போது அது 5.3 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளது.

நிலையான தொழிலாளர் சந்தை, ஆதரவான கொள்கைகளை செயல்படுத்துவதன் காரணமாக வீட்டுச் செலவுகளும் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியது.

மேலும் உலகளாவிய தொழில்நுட்ப சுழற்சியின் ஏற்றத்திலிருந்து வெளிப்புற தேவை, நேர்மறையான கசிவுகளை மீட்டெடுப்பதில் ஏற்றுமதி துறை இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset