நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தரைவழியாக சிங்கப்பூர் வந்து செல்லும் மலேசியர்களுக்காக ஒற்றைக் குடிநுழைவுச் செயலி: சைபுடின்

சிங்கப்பூர்:

ஜொகூர் மாநிலத்தில் உள்ள நிலவழிச் சோதனைச்சாவடிகள் வாயிலாக சிங்கப்பூருக்கு வந்து, பிறகு இங்கிருந்து மீண்டும் நாடு திரும்பும் மலேசியர்களுக்கான புதிய குடிநுழைவுச் செயலியை தமது அமைச்சு தேர்ந்தெடுத்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மைடிரிப், மைரென்டாஸ், மைபார்டர்பாஸ் ஆகிய மூன்று செயலிகளும் சோதனைத் திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டன.

மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக்கூடிய ஆற்றல் எந்தச் செயலிக்கு அதிகம் உள்ளது என ஆராயப்பட்டதாக  அவர் கூறினார்.

அந்த மூன்று செயலிகளில் ஒன்றை மலேசிய உள்துறை அமைச்சு தேர்ந்தெடுத்துள்ளது.

நிதி அமைச்சின் அனுமதியைப் பெற எங்கள் பரிந்துரையைக் கடந்த வாரம் சமர்ப்பித்தோம், என்று நவம்பர் 13ஆம் தேதி இரவு சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களுடனான ஒன்று கூடலின்போது அவர் இதனை தெரிவித்தார்.  

இந்த நிகழ்வு சிங்கப்பூரில் நடைபெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset