நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் துறையின் நேர்மை இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளது: ஐஜிபி

கோலாலம்பூர்:

நாட்டில் போலிஸ் துறையின் நேர்மை இன்னும் கவலையளிக்கும் வகையில் தான் உள்ளது.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

பலமுறை நினைவூட்டல்கள், எச்சரிக்கைகள் இருந்த போதிலும் போலிஸ் துறையின் நேர்மை இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

பணிக் கலாச்சாரம், உறுப்பினர்களின் நேர்மையின் அளவு ஆகியவற்றில் கடுமையான மாற்றங்கள் தேவை.

இதனால் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படைகள் சமூகத்தால் பொருத்தமானதாகவும் மதிக்கப்படும்தாகவும் இருக்கும்.

போதைப்பொருள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்காக ஒரு சில போலிஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் போலிஸ்படையின் நிலை சீர்குலைந்துள்ளது.

கடந்த உண்மையில், 2023 ஆம் ஆண்டு வணிகக் குற்ற வழக்குகளில் சந்தேக நபர்களாக 22 போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை அந்த எண்ணிக்கை 23ஆக பதிவாகியுள்ளது.

புக்கிட் அமானில் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்திருந்த போலிஸ் கண்காணிப்பாளர் மாதாந்திரக் கூட்டத்தில் பேசிய டான்ஶ்ரீ  ரஸாருடின் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset