நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை மத்திய அரசுக்கு செலுத்தியது: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநில அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி கடன் முழுமையாக செலுத்தப்பட்டது.

இது சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தின் உறுதிப்பாடு, திட்டமிடுவது மட்டுமல்ல, முயற்சிகளை செயல்படுத்தும் திட்டமாகும்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அமிரூடின், கடன் தீர்வு, துணை நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், மாநில அரசு நிறுவனங்களின் பங்களிப்பை நன்கொடைகள் மற்றும் ஈவுத்தொகைகள் மூலம் அதிகரிப்பதன் மூலம் ஒரு புதிய வருவாய் மூலோபாயத்தைத் தொடர வாய்ப்பளிக்கிறது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset