நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளர் கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியாவை நீக்கியது

கோலாலம்பூர்:

அமெரிக்காவின் கருவூலத் துறையின்  வர்த்தக கூட்டாளர் கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியா நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கருவூலத்தின் அனைத்துலக விவகார அலுவலகம் அறிக்கையின் படி,

அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளின் மேக்ரோ பொருளாதாரம்,  அந்நியச் செலாவணிக் கொள்கைகள் என்ற தலைப்பில் மலேசியா கடந்த அறிக்கையில் தனது அளவுகோலைப் பூர்த்தி செய்துள்ளது.

ஒரு பெரிய வர்த்தக பங்குதாரர் வர்த்தக வசதி, வர்த்தக அமலாக்க சட்டம் 2015இல் உள்ள மூன்று நிபந்தனைகளில் இரண்டை சந்திக்கும் போது, ​​வர்த்தக பங்குதாரர் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்.

அவ்வகையில் இந்த அறிக்கையில் மலேசியா கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2015 சட்டத்தின்படி, நாட்டின் முக்கிய வர்த்தக பங்காளிகளின் மேக்ரோ பொருளாதாரக் கொள்கைகள், அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு அறிக்கையை அமெரிக்க கருவூலத்திற்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset