செய்திகள் மலேசியா
தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு பள்ளிகளில் தொடங்கப்படும்: சார்லஸ் சந்தியாகோ
கோலாலம்பூர்:
தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் பள்ளி ரீதியில் தொடங்கப்படும்.
ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ இதனை கூறினார்.
கடந்த காலங்களில் குறிப்பிட்ட அளவில் தான் மழை பெய்யும்.
ஆனால் இப்போது நிலைத் தன்மை இல்லாத வானிலையாக உள்ளது. திடீரென மழை பெய்கிறது.
ஒரு கட்டத்தில் மழை பெய்யாமலே போய்விடுகிறது.
இதிலும் குறிப்பாக ஒரு மணி நேரத்தில் வெள்ளம் ஏறும் அளவிற்கு மழை பெய்கிறது.
சூழ்நிலை இப்படியிருந்தாலும் வீடுகளில் தண்ணீர் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
காரணம் நிலையில்லாத வானிலையால் மழை இல்லாமல் போய்விட்டால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
ஆகையால் மக்கள் தண்ணீரை வீணாக்கக் கூடாது. இது தான் ஸ்பானின் கோரிக்கையாக உள்ளது.
இதன் அடிப்படையில் பல தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு திட்டங்களை ஸ்பான் மேற்கொள்ளவுள்ளது.
இம்முறை பள்ளிகளை குறி வைத்து இந்த விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ், சீன, மலாய் என அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 15,000 ஆயிரம் மாணவர்களிடம் இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்க ஸ்பான் இலக்கு கொண்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் வாயிலாக அது பெரியவர்களை சென்றடையும் என்ற நம்பிக்கை ஸ்பானுக்கு உள்ளது.
இந்திய ஊடகவியலாளர்களுடனான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பின் சார்லஸ் சந்தியாகோ கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 8:27 pm
சிலாங்கூர் மாநில அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை மத்திய அரசுக்கு செலுத்தியது: அமிரூடின் ஷாரி
November 15, 2024, 7:05 pm
பிரதமர் மீது தவறான பார்வையை உருவாக்கும் நோக்கில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது: ஃபஹ்மி
November 15, 2024, 6:54 pm
தரைவழியாக சிங்கப்பூர் வந்து செல்லும் மலேசியர்களுக்காக ஒற்றைக் குடிநுழைவுச் செயலி: சைபுடின்
November 15, 2024, 5:04 pm
மலேசியா வாடிக்கையாளர்களுக்கான சந்தாவை நெட்ஃபிலிக்ஸ் உயர்த்தியுள்ளது
November 15, 2024, 5:03 pm
கனமழையால் தலைநகரின் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின
November 15, 2024, 5:02 pm
அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளர் கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியாவை நீக்கியது
November 15, 2024, 5:01 pm
போலிஸ் துறையின் நேர்மை இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளது: ஐஜிபி
November 15, 2024, 12:32 pm