செய்திகள் மலேசியா
மலேசியா வாடிக்கையாளர்களுக்கான சந்தாவை நெட்ஃபிலிக்ஸ் உயர்த்தியுள்ளது
கோலாலம்பூர்:
ஸ்ட்ரீமிங் சேவை தளமான நெட்ஃபிலிக்ஸ் மலேசிய வாடிக்கையாளர்களுக்கான சந்தாவை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வு அடிப்படை, ஸ்டாண்டர்ட், பிரிமியம், கைத்தொலைபேசி திட்டங்களை உள்ளடக்கியது.
அடிப்படைத் திட்டம் இப்போது மாதத்திற்கு 29.90 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை 28ஆக இருந்தது.
முன்பு மாதத்திற்கு 45 ரிங்கிட்டாக இருந்த ஸ்டாண்டர்ட் திட்டத்திற்கான வாடிக்கையாளர்கள் இப்போது 49.90 ரிங்கிட்டாக செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் பிரிமியம் திட்டத்தின் விலை 55 ரிங்கிட்டில் இருந்து 62.90 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு மாதத்திற்கு 17 ரிங்கிட்டுக்கு கிடைத்த கைத்தொலைபேசி இல் திட்டம் இப்போது 18.90 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
ஸ்டாண்டர்ட் அல்லது பிரிமியம் திட்டத்தை வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள்,
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 13 ரிங்கிட் செலுத்த வேண்டும்.
இந்தக் கூடுதல் கட்டணம் முதன்மைக் கணக்குதாரரிடம் வசூலிக்கப்படும் என நெட்ஃபிலிக்ஸ் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 8:27 pm
சிலாங்கூர் மாநில அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை மத்திய அரசுக்கு செலுத்தியது: அமிரூடின் ஷாரி
November 15, 2024, 7:05 pm
பிரதமர் மீது தவறான பார்வையை உருவாக்கும் நோக்கில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது: ஃபஹ்மி
November 15, 2024, 6:54 pm
தரைவழியாக சிங்கப்பூர் வந்து செல்லும் மலேசியர்களுக்காக ஒற்றைக் குடிநுழைவுச் செயலி: சைபுடின்
November 15, 2024, 5:03 pm
கனமழையால் தலைநகரின் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின
November 15, 2024, 5:02 pm
அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளர் கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியாவை நீக்கியது
November 15, 2024, 5:01 pm
போலிஸ் துறையின் நேர்மை இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளது: ஐஜிபி
November 15, 2024, 2:46 pm
தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு பள்ளிகளில் தொடங்கப்படும்: சார்லஸ் சந்தியாகோ
November 15, 2024, 12:32 pm