நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

23 காவல்துறை அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்: ரஸாருடின் ஹுசைன்

கோலாலம்பூர்: 

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் வணிக குற்ற வழக்குகளில் மொத்தம் 23 காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரச மலேசியக் காவல்துறையின் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார். 

இது போன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளால் அரச மலேசியக் காவல்துறையின் நேர்மையும் பெயரும் கலங்கப்படுவதாக   ரஸாருடின் ஹுசைன் கவலை தெரிவித்தார். 

கடந்தாண்டு 22 காவல்துறை அதிகாரிகள் வணிக குற்ற வழக்குகளில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

மீண்டும் மீண்டும் நினைவூட்டல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வழங்கினாலும் ஒரு சில அதிகாரிகள் இன்னும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர், 

நீல நிறச் சீருடையின் பின்னால் இருக்கும் நம்பிக்கையை, கண்ணியமும் சுயநலமும் இல்லாத ஒருவருடன் ஒப்பிட்டால் அது மிகையாகாது என்று நினைப்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில் நான் மிகவும் ஏமாற்றமும் வேதனையும் அடைகிறேன் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset