நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் தாக்குதலை நிறுத்த தீர்மானம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்

நியூயார்க்:

இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தி வரும் காசாவில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள வசதியாக  உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நிறைவேறியது.

கடந்த ஒரு மாதமாக போரை நிறுத்த நான்கு முறை கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் தோல்வியடைந்தன.இந்நிலையில், 5வது முறையாக மால்டா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

15 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 12 நாடுகள் வாக்களித்தன. ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.

இந்தத் தீர்மானத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை நிலைநாட்டவும்,  ஐ.நா. மனிதாபிமான அமைப்புகள் பாதுகாப்பான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், தடையில்லாமல் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லவும் காசா முனைப் பகுதியில் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பயங்கரவாதம் மூலம் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நாடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷியாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வியடையச் செய்தன.

UN security council calls for 'urgent and extended' humanitarian pauses in  Gaza | Arab News

மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷியா கொண்டு வந்த 2 தீர்மானங்களையும், பிரேஸிலின் ஒரு தீர்மானத்தையும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வியடையச் செய்தது.

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் முடியாது, மருத்துவமனைகளுக்கு எரிபொருள் கொண்டுசெல்லவும் முடியாது. ஆகையால், உடனடி போர் நிறுத்தம் கோராததால் வாக்கெடுப்பை புறக்கணித்தோம்' என்று ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் கூறினார்.

எனினும், இந்தத் தீர்மானம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்ததாது இது தங்களை கட்டுப்படுத்தாது எனவும் இஸ்ரேலின் நடவடிக்கை தொடரும் என்றும் அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிலாட் எர்டான் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset