நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் சீனக் கப்பல்: இந்தியா கண்காணிப்பு

புது டெல்லி:

பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட வந்துள்ள சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுடனான கடற்படை பாதுகாப்புப் பயிற்சிக்காக முன்னணி போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் உள்பட பல கப்பல்களை சீன கடற்படை ஈடுபடுத்தியுள்ளது.

அந்தக் கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியே இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த தருணத்திலிருந்து இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset