நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஐபோன் ஒட்டுக் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார்

புது டெல்லி:

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் ஐபோன் ஒட்டுக்கேட்க முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை செய்தி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, காங்கிரஸின் சசி தரூர், பவன் கெரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு ஆப்பிள் நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது.

அதில், உங்களுடைய செல்போனில் சட்டவிரோதமாக நுழைந்து சில தகவல்களைத் திருட அரசு ஆதரவு பெற்ற தாக்குதல் அமைப்புகளால் முயற்சி நடைபெறுவதாக' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், அண்மையில் அனுப்பப்பட்ட எச்சரிக்கை செய்திகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட அரசு ஆதரவு பெற்ற தாக்குதல் அமைப்புகளையும் காரணம் கூற முடியாது.

எச்சரிக்கை செய்திகளை வெளியிடுவதற்கான காரணம் பற்றிய முழுமையான தகவலை எங்களால் வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset