நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

53 நாள்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையானார் சந்திரபாபு நாயுடு

அமராவதி:

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 53  நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையானார்.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் வழக்கில் அவர் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கைது செய்யப்பட்டு ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்குரைஞர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள்  சந்திரபாபுவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset