செய்திகள் வணிகம்
ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டம் இல்லை
கோலாலம்பூர் :
கடந்த 1998-ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடியின் போது மலேசியா செய்தது போல் ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டத்தை விதிக்க அரசாங்கம் விரும்பவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் தற்போதைய சவால்களைக் கையாள்வதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்று துணை நிதி அமைச்சர் II ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினார்.
உலகளாவிய நிதிச் சந்தையின் ஏற்ற இறக்கம், அந்நியச் செலாவணி நகர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான நிலையில் தற்போதைய தேசிய பொருளாதாரம், நிதி அமைப்புஉள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ரிங்கிட் மதிப்பை நிரந்தரமாக நிர்ணயித்துவிட்டால் மலேசியா அதன் பணவியல் கொள்கை சுதந்திரத்தை இழக்க கூடும்.
அதற்கு பதிலாக ரிங்கிட் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட நாணயங்களின் அடிப்படையில் வட்டி விகிதங்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, ரிங்கிட்டை அமெரிக்க டாலருடன் நிர்ணயம் செய்தால் அமெரிக்காவிலுள்ள வட்டி விகிதங்களுக்கு ஏற்ப நாம் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும்.
இது மக்களுக்கு அதிக நிதி செலவின ரீதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
மக்களவையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு முன்பு மேற்கொண்டதைப் போல் பேங்க் நெகாரா வழியாக அரசாங்கம் ரிங்கிட்டின் மதிப்பைக் நிலையாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதா என்று வான் அகமது எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 5:44 pm
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 30, 2024, 10:30 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am