நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் நன்கொடை விவரங்களை மக்கள் கேட்க உரிமையில்லை: ஒன்றிய பாஜக அரசு

புது டெல்லி:

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரங்களை அறிய பொதுமக்களுக்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்தது.

தேர்தல் நிதியை ரொக்கமாக அளிப்பதற்கு மாற்றாக நிதிப் பத்திரங்களை பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து பெற்று வருகிறது.

இதில் பாஜகவுக்கு 2017-இல் கிடைத்த ரூ. 210 கோடி 2021-22இல் ரூ.1023 கோடியாக அதிகரித்தது. அக்கட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 5272 கோடியாக அதிகரித்துள்ளது.

காங்கிரஸுக்கு 2017-இல் ரூ.5 கோடியாக இருந்த நன்கொடை 2022-இல் ரூ.236 கோடியாக அதிகரித்துள்ளது. அக் கட்சி கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 952 கோடி பெற்றுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நன்கொடையை பத்திரங்கள் மூலம் பெறுவதற்கு தடை விதித்து வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் 2017-இல் வழக்குத் தொடுத்தன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முதல் விசாரணை தொடங்குகிறது.
இந்த வழக்கில் ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், நன்கொடைக்கான ஆதாரம் குறித்து அறிய மக்களுக்கு உரிமையில்லை. அடிப்படை உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது.

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உரிமைகளை மீறும்போது மட்டுமே நீதிமன்றம் தலையிட்டு அது குறித்து ஆராய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset