நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உள்நாட்டு விநியோக தேவைக்கு ஏற்ப வெங்காய ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்துகிறது

புதுடெல்லி :

வெங்காயம் ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது. வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 3,822 வெள்ளி விதித்துள்ளது.

இந்த நிலையான விலை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் இவ்வாண்டின் இறுதி வரை இந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

2023-ஆம் ஆண்டு பயிர் பருவத்திலிருந்து கையிருப்பில் சேமிக்கப்படும் வெங்காயத்தின் அளவு குறைந்து வருவதால், உள்நாட்டு நுகர்வோருக்குச் சரியான விலையில் வெங்காயம் போதுமான அளவு கிடைப்பதைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கம் அதன் தாங்கல் இருப்புக்களை அதிகரிக்க கூடுதலாக 200,000 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றது.
 
சில்லறை விற்பனை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலிருந்து வெங்காயத்தைக் கொள்முதல் கையிறுப்பிலிருந்து இறங்கி வருகிறது.

இந்தியா ஆகஸ்ட் மாதம் வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது.

டில்லியில் வெங்காயத்தின் விலை சமீபத்திய நாட்களில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

அடுத்த மாதம் தற்போதைய விலையில் இருந்து  40 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset