நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அயோத்தி ராமர் கோவில் விழாவில் பிரதமராக மோடி பங்கேற்க கூடாது: ஜாமியத் உலமா இ ஹிந்த்

புது டெல்லி:

அயோத்தியில் அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பிரதமராக மோடி பங்கேற்கக் கூடாது என ஜாமியத் உலமா இஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சி எனது வாழ்நாளில் நடைபெறுவதால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,"இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி எந்தவொரு மதம் சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்' என ஜாமியத் உலமா இஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மஹ்முத் மதனி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மதம்சார்ந்த சடங்குகளும் அரசியல் தலையீடின்றி சுதந்திரமாக நடைபெற வேண்டும்.அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதித்த தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

அயோத்தியின் அருகே புதிதாக நிறுவப்படவுள்ள மசூதியின் திறப்புவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என சில இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை எங்களின் கொள்கைகளுக்கு மாறாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset