நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காசா போர் நிறுத்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புது டெல்லி:

காசாவில் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்தக் கோரும் ஐ.நா. தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்திஎக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கும் என்ற மகாத்மா காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டி காசாவில் போர் நிறுத்தம் கோரும் வாக்கெடுப்பை இந்தியா தவிர்த்தது அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைதி, உண்மை ஆகிய கோட்பாடுகளின் மீது இந்தியா கட்டமைக்கப்பட்டதாகும். இக்கோட்பாடுகளுக்காகவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

பாலஸ்தீனத்தில் சர்வதேச சட்டங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, உணவு, குடிநீர், மருந்துகள், தகவல்தொடர்பு, மின்சாரம் என எதுவுமின்றி, லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுபோன்ற சூழலில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், இந்தியா மௌனமாக வேடிக்கை பார்ப்பது, ஒரு தேசமாக இத்தனை காலம் நிலைநிறுத்தப்பட்ட அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஐ.நா.வில் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில், தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்க சர்வாதிகாரத்தின் அடிபணிந்த கூட்டாளியாக இந்தியா இருக்கும் வகையிலான வெளியுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருவதை வெளிக்காட்டுகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் உடனான உறவை வலுப்படுத்துவதன் மூலம் பாலஸ்தீனத்துக்கான இந்தியாவின் நீண்ட கால ஆதரவை நிராகரிப்பதாக, மோடி அரசின் செயல்பாடு உள்ளது' என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு இடையே பாலஸ்தீனம் தொடர்பாக எந்த அணுகுமுறையைக் கையாள்வது என்று தெரியாமல், பிரதமர் மோடி அரசு குழப்பத்தில் உள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset