நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி. ஆளுநருக்கு நில மோசடி வழக்கில் நீதிமன்றம் சம்மன்

பதாயுன்:

உத்தர பிரதேசத்தில் நில மோசடி வழக்கை விசாரித்த நீதிமன்றம் கையகப்படுத்தப்பட்டது நிலத்துக்கு மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

உத்தர பிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் ரூ.12 லட்சம் இழப்பீடு அளித்து அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் இந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து அரசுக்கு அளித்ததாகவும் கூறி சந்திரஹாஸ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலையும் ஒரு தரப்பாக அவர் சேர்த்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் கோரி, கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென்னுக்கு நீதித் துறை மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார்.

இதற்கு ஆளுநர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று எச்சரித்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset