நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சுதந்திரமான பாலஸ்தீனத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா

நியூயார்க்:

இறையாண்மை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீனத்துக்கு எப்போதும் ஆதரவு அளிப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதர் ரவீந்திரா பேசுகையில்,

ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையில் பொதுமக்கள் ஏராளமாக உயிரிழப்பது, பாதுகாப்பு சூழல் மோசமடைந்து வருவது குறித்து இந்தியா மிகுந்த கவலையடைந்துள்ளது.

மனிதத்தன்மைக்கு எதிரான செயல்கள் அதிகரித்துள்ளதும் ஆபத்தாக உள்ளது.  பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும், அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

இந்த பிரச்னையில், இஸ்ரேலுக்கு அருகே அமைதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள்ளும் வாழ்வதற்கு, இறையாண்மைக் கொண்ட சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வழிவகுக்கும் இருநாடுகள் தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வந்துள்ளது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset