நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என மாற்ற பரிந்துரை

புது டெல்லி:

சிபிஎஸ்இ பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயர் "பாரத்' என மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரையை என்சிஇஆர்டி சார்பில் அமைக்கப்பட்ட சமூக அறிவியல் பாடத்துக்கான உயர்நிலைக் குழு அளித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள்  இந்தியா கூட்டணியை உருவாக்கின.

அப்போதில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் இந்தியா என்ற பெயருக்கு கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர்.

ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டின்  அழைப்பிதழில் "இந்திய குடியரசுத் தலைவர்' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக "பாரத குடியரசுத் தலைவர்' என்று குறிப்பிடப்பட்டது.

இந்தச் சூழலில், என்சிஇஆர்டி பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை "பாரத்' என மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  பாட புத்தகங்களில் பண்டைய வரலாறுக்குப் பதிலாக பாரம்பரிய வரலாற்றை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாட புத்தகங்களில் தற்போது ஹிந்து சமய அரசர்களின் தோல்விகள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், முகலாயர்கள் மற்றும் சுல்தான்களை அவர்கள் வெற்றிபெற்ற விவரங்களை இடம்பெறச் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset