நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

4 ஆயிரம் மதரஸாக்களை கண்காணிக்க உத்தர பிரதேச ஆதித்யநாத் அரசு உத்தரவு

புது டெல்லி:

வெளிநாட்டு நிதியுதவி பெறுவதாக குற்றம்சாட்டி 4,000 மதரஸாக்களை கண்காணிக்க உத்தர பிரதேச மாநில குழு அமைத்துள்ளது.

இந்த மதரஸாக்களில் பெரும்பாலானவை இந்தியா-நேபாள எல்லையில் உள்ளன. அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த மதரஸாக்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாமல் செயல்படும் 12க்கும் மேற்பட்ட மதரஸாக்களுக்கு தொடக்கக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், மதரஸாக்கள் தொடர்பான ஆவணங்களை அத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

After UP Madrasas Survey, Centre Stops Scholarships For Students of Class  1- 8 | NewsClick

அங்கீகாரம் பெறாத மதரஸாக்களுக்கு நாள்தோறும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச  ஆதித்யநாத் அரசு எச்சரித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சுமார் 24,000 மதரஸாக்கள் உள்ளதாகவும், அவற்றில் 8,000 மதரஸாக்கள் உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்குவதாகவும் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset