செய்திகள் மலேசியா
சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 37 மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள்: டத்தோ ரமணன்
கோலாலம்பூர்:
மக்கள் நட்புறவுத் திட்டத்தின் கீழ் சுங்கப்பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 37 மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாடாளுமன்றத்தில் இன்று 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன் மேற்கணடவாறு கூறினார்.
38 திட்டங்களில் 6 திட்டங்கள் பொது வசதிகளை மேம்படுத்துவது, 8 திட்டங்கள் பள்ளிவாசல், சூராவ்களை மேம்படுத்துவது, 4 முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்களை மேம்படுத்துவது ஆகியவையாகும்.
அதே வேளையில் தேசியப் பள்ளிகளுக்கான 12 தரம் உயர்த்துதல், மேம்பாட்டுத் திட்டங்கள், இடைநிலைப் பள்ளிகளுக்கான 5 தரம் உயர்த்துதல், மேம்பாட்டுத் திட்டங்கள், 2 தாய்மொழிப் பள்ளிகளுக்கான தரம் உயர்த்துத, மேம்பாட்டுத் திட்டங்களாகும்.
அனைத்து அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் நட்புறவு திட்டத்தின் வாயிலாக நிதி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத் தொகுதிகளிம் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள இந்நிதி பயன்படுத்தலாம்.
மேலும் சிலாங்கூர் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்புப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் ஒதுக்கப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட்டில் திட்டங்களை சுங்கைபூலோ நாடாளுமன்றம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
மலேசியாவின் அடிப்படைப் பிரச்சினையான வறுமை இடைவெளியைக் குறைக்க அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 23, 2024, 12:15 am
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு மாட்டிறைச்சியைக் கடத்த முயன்ற ஓட்டுநர் தடுத்துவைப்பு
December 22, 2024, 2:12 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் எந்த பிரதமருக்கும் சளைத்தவர் அல்ல: டத்தோஸ்ரீ அன்வார்
December 22, 2024, 10:47 am
மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு
December 21, 2024, 9:53 pm
ரோபோடிக் கல்வி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்: ஆசிரியை ரூபிணி
December 21, 2024, 5:59 pm
ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்
December 21, 2024, 5:17 pm