நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு

கோலாலம்பூர்: 

மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. 

இந்த மாநாடு கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் ASIA PACIFIC UNIVERSITY இல் நடைபெற்றது 

தமிழ்க்கல்வியின் தேவையும் தீர்வும் எனும் கருப்பொருளில் தமிழ் அறவாரியம் தமிழ் இயக்கங்களுடன் இணைந்து மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தினர். 

இம்மாநாட்டிற்குப் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவருமான மாண்புமிகு பி.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். 

மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாட்டில் தமிழ்க் கல்வியின் தேவையும் தீர்வும் என்ற தலைப்பில் ஆசிரியர் கல்விக் கழக மூத்த விரிவுரையாளர் முனைவர் பழனி கிருஷ்ணசாமி தலைமையில் கலந்துரையாடலும் நடைபெற்றது 

இந்த மாநாட்டில் ஆசிரியர் பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ்க்கல்வி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset