நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு மாட்டிறைச்சியைக் கடத்த முயன்ற ஓட்டுநர் தடுத்துவைப்பு

சிங்கப்பூர்:

மாட்டிறைச்சியைச் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குக் கடத்த முயன்ற சந்தேகத்தில் ஓட்டுநர் ஒருவர் சிங்கப்பூர் காவல் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 21 கிலோவுக்கும் அதிகமான மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் காரில் ஜப்பானிய Wagyu வகை மாட்டிறைச்சியை 3 பொட்டலங்களில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று காலை சுமார் 11.40 மணிக்கு Second Link நிலச் சோதனைச்சாவடியில் அவர் பிடிபட்டார்.

அந்த மாட்டிறைச்சிக்கு மலேசியாவின் கால்நடை மருத்துவ ஆணையம் மருத்துவச் சான்றிதழையும் ஹலால் (halal) சான்றிதழையும் வழங்கவில்லை
என்பது விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டிறைச்சியின் விலை 18,800 ரிங்கிட் (சுமார் 5,700 சிங்கப்பூர் வெள்ளி).

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset