நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 90க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு 3,170,000 ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 90க்கும் மேற்பட்ட ஆலங்களுக்கு 3,170,000 ரிங்கிட் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்  நேரடி மானியத்தின் கீழ் இந்த இந்த உதவி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

மலேசிய வரலாற்றில் முதல் முறையாக 90 கோவில்களுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய மானியம் வழங்கப்படுவது  இதுவே முதல் முறையாகும்.

இவ்வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிதி ஆலய நிர்வாகங்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

முன்னதாக இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் டத்தோஸ்ரீ ரமணன் இதற்கு முன்னர் இந்திய தொழில் முனைவோருக்கு பல வகைகளில் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

இப்போது நாட்டில் உள்ள இந்து கோவில்களில் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் பிரதமர் துறையின் நேரடி மானியத்தை பெற்று தந்து பேருதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset