செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் நலன் காப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் எந்த பிரதமருக்கும் சளைத்தவர் அல்ல: டத்தோஸ்ரீ அன்வார்
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தின் நலன் காப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்த பிரதமருக்கும் சளைத்தவர் அல்ல.
அவர் விளம்பரம் இன்றி இந்திய சமுதாயத்திற்கு சேவைகளை செய்து வருகிறார் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
2025 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும் தான் பிரதமர் ஒதுக்கினார் என சிலர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவ்வாண்டு மித்ரா, தெக்குனை தவிர்த்து எனது அமைச்சின் கீழ் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன
அதே வேளையில் அரசாங்கத்தின் பல திட்டங்களின் வாயிலாக இந்திய சமுதாயத்தினர் பயனடைந்துள்ளனர்.
அதன் உச்சக்கட்டமாக இன்று 90 ஆலயங்களுக்கு 3,170,000 ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிதி பிரதமரின் சொந்த நிதியாகும். இது எந்த பட்ஜெட்டிலும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்..
இதே போன்று அடுத்த ஆண்டும் பல திட்டங்களின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு உதவிகள் வழங்கப்படும்.
இப்படி பிரதமர் பல நலத் திட்டங்களின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு உதவிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக கடந்த கால பிரதமர்கள் போன்று எந்தவொரு விளம்பரமும் இன்றி நமது பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு உதவிகளை செய்து வருகிறார்.
ஆகவே இந்திய சமுதாயத்திற்கு பிரதமரும் மடானி அரசாங்கமும் ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பாமல் அரசாங்கத்தில் உள்ள வாய்ப்புகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவே எனது கோரிக்கையாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2024, 10:47 am
மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு
December 21, 2024, 9:53 pm
ரோபோடிக் கல்வி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்: ஆசிரியை ரூபிணி
December 21, 2024, 5:59 pm
ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்
December 21, 2024, 5:17 pm
செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது; கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்: டத்தோஸ்ரீ சரவணன்
December 21, 2024, 4:51 pm