நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்கு  13 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை  டத்தோஸ்ரீ ரமணன் பெற்று தந்துள்ளார்: டத்தோ அன்புமணி பாலன்  

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கத்திடம் இருந்து இதுவரை 13 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் பெற்றுத் தந்துள்ளார்.

துணையமைச்சரின் மூத்த அந்தரங்க செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் இதனை தெரிவித்தார்.

தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 3 கோடி ரிங்கிட், அமானா இக்தியார் பெண் திட்டத்தின் வாயிலாக 5 கோடி ரிங்கிட், பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 5 கோடி ரிங்கிட்  ஒதுக்கப்பட்டது.

இது தவிர்த்து ஐ-பேப் மூலம் 60 லட்சம் ரிங்கிட்டை பெற்று தந்துள்ளார்.

ஆக மொத்தம் இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் அரசாங்கம் 13 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கி உள்ளது.

இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய தொகை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டதில்லை.

இப்போது துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்திய சமுதாயம் மிகப்பெரிய நன்மைகள் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.

இப்போது பிரதமர் துறையின் நேரடி மானிடத்தின் கீழ் 90 கோவில்களுக்கு மிகப்பெரிய மானியத்தையும் அவர் பெற்று தந்துள்ளார் என்று டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் உள்ள கலா மண்டபத்தில் 90 கோவில்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வில் வரவேற்புரையாற்றிபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset