நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலஸ்தீன் மீது இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற போர் - இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் பிரார்த்தனை

புதுடெல்லி: 

ஹமாஸ் போராளிகள் மீதும் அப்பாவி பொது மக்கள் மீதும் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக போர் தொடுத்துள்ளது. 

இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தினமும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். கையில் உள்ள பணம் கரைந்து வருவதால் உணவு உள்பட அனைத்திலும் சிக்கனத்தை கடைபிடிக்கிறோம். இங்குள்ள சில நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவி வருகின்றனர்.

காசாவில் எங்களது குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பது குறித்த எந்த தகவலையும் இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. 

இதனால், பாடங்களை படிக்க முடியாமல் தூக்கமின்றி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருகிறோம். விரைவில் போர் முடிவுற்று குடும்பத்தை காண செல்ல வேண்டும் என்பதே எங்களின் இப்போதைய பிரார்த்தனை.

இஸ்ரேல் இனப் படுகொலை செய்துவருகிறது. உலக நாடுகள் அது புரிந்துவரும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்காமல் அதன் போக்கை ஆதரித்து வருவதை நிறுத்த வேண்டும்" என்றனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset