நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவிலிருந்து 42 கனடா அதிகாரிகள் திரும்பி சென்றனர்: பிரிட்டனும் அமெரிக்கா கவலை

லண்டன்:

42 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து திரும்ப சென்றது கவலையளிப்பதாக பிரிட்டனும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பிரிட்டனின் வெளிநாடு, காமன்வெல்த் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் முடிவுடன் நாங்கள் முரண்படுகிறோம். இந்திய அரசு தூதரக அதிகாரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சிறப்பு உரிமைகள் ரத்து செய்துள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடா நடத்தி வரும் விசாரணையில் ஒத்துழைக்கும்படி இந்தியாவை வலியுறுத்துவோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், இந்தியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து, தனது தூதரக அதிகாரிகளைக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கனடா குறைத்திருப்பது கவலையளிக்கிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைத் தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் இந்தியாவை வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

சமநிலையைக் கடைப்பிடிக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கையை சர்வதேச விதிகளை மீறியதாகக் கட்டமைப்பதை நிராகரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் உளவுத்துறையினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றும் கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset