நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் வந்தார் நவாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நாடு திரும்பினார்.

தற்போது பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டேன் என்றும் பாகிஸ்தானின் வளர்ச்சிதான் முக்கியம் என்றார்.

பனாமா ஆவண முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் 2017இல் நவாஸ் ஷெரீஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  அவருக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

சிறையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக லண்டன் சென்று சிகிச்சை பெற்றார். இரு வழக்குகளிலும் நவாஸ் ஷெரீஃபுக்கு வரும் 24ம் தேதி வரை ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரிலிருந்து தனி விமானம் மூலம் நவாஸ் ஷெரீஃப் சனிக்கிழமை இஸ்லாமாபாத் வந்தடைந்தார்.

அவர் பாகிஸ்தான் திரும்பிருப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில் பிஎம்எல்என் கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset