நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு

மோஸ்கோ: 

ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. புதின் இதில் கலந்து ஐந்தாவது தவணையாக புதிய அதிபராக பதவியேற்று கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் விளேடிமிர் புதின், 87 விழுக்காடு வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி அடைந்தார். 

நடப்பு ரஷ்ய அரசாங்கம் ஒரு புதிய அரசாங்கத்தால் ஆட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.இதற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற அவையிடமிருந்து இணக்கம் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பதவிகளுக்குப் புதினே நேரடியாக நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் நியமிக்கலாம். சிலர் புதின் அரசாங்கத்தில் இடம்பெறும் வேளையில் பலர் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset