நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

வாஷிங்டன்: 

ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்டத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் புகழ்பெற்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்றார். 

இந்த ராக்கெட்டை புளோரிடாவிலுள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதளம் 41-லிருந்து இந்திய நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு ஏவ நாசா திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் கடைசி நேரத்தில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் செல்ல இருந்த,விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்குச் செல்கின்றார்.

ஏற்கனவே 2 முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு செய்த அனுபவம் கொண்டவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset