நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்‌ரேல்

கெய்ரோ: 

போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்ட பிறகும் காசாவின் தென் பகுதியிலுள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அமைப்புடன் எகிப்த், கத்தார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதாக எகிப்து, கத்தார் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ராஃபா நகரம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தின.

அந்நகரின் சில பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

காசா போர் காரணமாக உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ராஃபாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இந்நிலையில், ராஃபா மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தில் அங்கிருந்து வெளியேறும் நிலை அவர்களில் பலருக்கு ஏற்பட்டுள்ளது .

ஆக அண்மைய போர் நிறுத்த உடன்படிக்கையில் இடம்பெறும் நிபந்தனைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளவர்களுடன் இது குறித்து கலந்துரையாட பேராளர் குழு ஒன்றை அனுப்பி தீர்வு காண முயற்சி செய்ய இருப்பதாக அவர் கூறினார்.

ராஃபா மீதான தாக்குதலைத் தொடர இஸ்ரேலிய அமைச்சர்களும் ராணுவ உயர் அதிகாரிகளும் ஒப்பதல் அளித்துள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset