நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விரைவு ரயிலுக்கு பெயர் மாற்றம்; மோடியின் சுயவிளம்பரத் தொல்லைக்கு அளவே இல்லையா?: ஜெய்ராம் ரமேஷ்

புது டெல்லி: 

தில்லி - மீரட்டை இடையே செல்லும் ரேபிட் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த அதிவிரைவு ரயிலின் பெயர் "நமோ பாரத்' என திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.

வந்தே பாரத் என்ற ரயில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளி்ல் இயங்கி வரும்நிலையில், இந்த ரயிலின் பெயரை வந்தே பாரத் என மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தப் பெயர் மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், "கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ரயிலுக்கு நமோ பாரத் சூட்டப்பட்டுள்ளது.  அவரின் சுயவிளம்பர தொல்லைக்கு எல்லையே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset