நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஏவுகணைகளை இடைமறித்து அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன்:

காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும்நிலையில்,மேற்காசியா முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது, இந்நிலையில், வான் எல்லையில் பாய்ந்து சென்ற ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து அழித்துள்ளது.

அந்த ஏவுகணை இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுமார் 2 வாரங்களாக நடைபெற்று வரும் காசா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் கார்னி போர்க் கப்பல், 3 க்ரூஸ் வகை ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது.

இதனிடையே, இராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது கடந்த 3 நாள்களாக ட்ரோன் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset