நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்

கொழும்பு:

இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளுக்கும் இலங்கை தொடர்ந்து வழங்கும் 

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும் பொழுது 30 நாட்களுக்கான விசா கட்டணமாக அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய தொகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, போன்ற 07 நாடுகளுக்கும் இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட விசா நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவருக்கான விசா நடவடிக்கைகளை முன்னெடுக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset