நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

UAE ஃபாஸ்ட் 5 விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வெற்றி: மாதம் ரூ.5.5 லட்சம் 25 ஆண்டுகள்

துபை:

UAE யில் ஃபாஸ்ட் 5 விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 49 வயதான நடராஜன்  வெற்றி பெற்றதன்மூலம் அவருக்குப் பரிசுத்தொகையாக மாதம் ரூ.5.5 லட்சம் வீதம் 25 ஆண்டுகள் வழங்கப்படவுள்ளது.

வார இறுதி நாள்களில் "பாஸ்ட் 5' என்ற விளையாட்டு நிகழ்ச்சியை எமிரேட்ஸ் ட்ரா நிறுவனம் நடத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு வாரமும் வெற்றி பெறுபவருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த வாரம் நடைபெற்ற விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் வெற்றி பெற்று அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

இவர் ஆம்பூரில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் இந்த விளையாட்டில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது அடில் கான் என்பவர் வெற்றிபெற்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset