நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகனுக்கு போலி பிறப்புச் சான்றிதழ்: அரசியல்வாதி ஆஸம் கான், மனைவி, மகனுக்கு 7 ஆண்டு சிறை

ராம்பூர் :

மகனுக்கு போலி பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆஸம் கான், அவரது மனைவி தஸீன் ஃபாத்திமா, மகன் அப்துல்லா ஆஸம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லக்னௌ, ராம்பூர் ஆகிய இரு இடங்களில் இருந்து போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பெற அப்துல்லா ஆஸமுக்கு அவரது தந்தை ஆஸம் கானும், தாய் தஸீனும் உதவியதாகக் கூறி, ராம்பூர் காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ புகாரளித்தார்.

அவர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்த நீதிபதி, மூவருக்கும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

இதையடுத்து, மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் அருண் பிரகாஷ் சக்úஸனா தெரிவித்தார்.

முன்னதாக, அவதூறு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 2022ஆம் ஆண்டில் தனது எம்எல்ஏ பதவியை ஆஸம்கான் இழந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset