நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மலேசியாவுக்கு 1.70 லட்சம் டன் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி

புது டெல்லி:

மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு 10.34 லட்சம் டன் பாசுமதி அல்லாத பிற அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில், கடந்த ஜூலை 20ம் தேதி பாசுமதி அல்லாத பிற அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்தது.

சில நாடுகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. ,

நேபாளத்துக்கு 95,000 டன், கேமரூனுக்கு 1.90 லட்சம் டன், கோட் டிவாருக்கு 1.42 லட்சம் டன், கினிக்கு 1.42 லட்சம் டன், மலேசியாவுக்கு 1.70 லட்சம் டன், பிலிப்பின்ஸுக்கு 2.95 லட்சம் டன், செஷல்ஸுக்கு 800 டன் பாசுமதி அல்லாத பிற அரிசியை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset